Sunday, December 16, 2012
இலங்கை::யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வரும், புனர்வாழ்வு பயிற்சிகளுக்கு உட்படுத்தப்படாத புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்குவது என பாதுகாப்பு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
புனர்வாழ்வு பயிற்சிகளை முடித்து கொண்டு, தமது சொந்த கிராமங்களில் சாதாரண வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள முன்னாள் புலிப் போராளிகளை, புனர்வாழ்வு பயிற்சிகளை பெறாதுள்ள, புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்டு வருவதே இதற்கான காரணமாகும்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகள் மற்றும் புலனாய்வு பிரிவினர் இது குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளனர். இந்த நிலையில், இராணுவம் மற்றும் காவற்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ள புனர்வாழ்வு பயிற்சிகள் அளிப்படாத முன்னாள் புலி உறுப்பினர்களை பாதுகாப்பு தரப்பினர், கைதுசெய்து, புனர்வாழ்வு பயிற்சிகளுக்கு உட்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் ஏற்கனவே பாதுகாப்பு தரப்பினரால், பல முன்னாள் புலிபோராளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment