Sunday, December 16, 2012
இலங்கை::வெளிநாடுகளில் இருந்த சுற்றுலா வீசாக்களின் மூலம் நாட்டுக்குள் பிரவேசித்து தொழில்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆயிரம் பேர் இந்த வருடத்தில் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சுற்றுலா வீசாக்களை மோசடி செய்த குற்றத்தின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வு அதிகாரிகளே பெருந்தொகையானோரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டோரில் அதிகளவானவர்கள் பாலியல் தொழில்களில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் என தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு பெண்களை பாலியல் தொழில்களில் ஈடுபடுத்தும் பாரியளவு வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டில் இருந்து பெண்கள் சட்டவிரோதமான முறையில் வரவழைக்கப்பட்டு அவர்களை 25 ஆயிரம் ரூபாவுக்கும் மேலாக பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யும் ஒரு குழுவினரும் இதில் அடங்குகின்றனர்.
இதனடிப்படையில், நேற்றைய தினமும், இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதேவேளை, பிறிதொரு புறத்தில் பாரிய எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள் கையடக்க தொலைபேசிகளை வீடு வீடாக சென்று விற்பனை செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களும் வீசா நடைமுறைகளை மீறியவர்கள் என்ற வகையில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டனர்.
எதிர்காலத்திலும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுவதுடன். வெளிநாட்டவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment