Saturday, December 15, 2012
இலங்கை::வடக்கின் முதலமைச்சராக டக்ளஸ் தேவானந்தா தெரிவுசெய்யப்படுவார் என அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன நம்பிக்கை வெளியிட்டார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித
சேனாரத்ன பாசையூரில் அமைந்துள்ள கடலுணவு பதனிடும் தொழிற்சாலை மற்றும் குருநகரில் அமைந்துள்ள ஐஸ்தொழிற்சாலை ஆகியவற்றினைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகின்றது. இத்திட்டங்கள் அடுத்த வருடத்தில் மேலும் அதிகளவில் முன்னெடுகப்படவுள்ளது என்றார்.
நாடுஅபிவிருத்தியில் முன்னேற்றமடைந்து வருகின்ற அதேவேளையில் அரசியல் ரீதியிலும் முன்னேற்றமடைகின்றபோது எதிர்காலத்தில் வடக்கின் முதலமைச்சராக தற்போதைய பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருப்பாரென்ற நம்பிக்கை இருக்கின்றது.
மேலும், அபிவிருத்தி மற்றும் அரசியல் ரீதியான முன்னேற்றங்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் நாம் இணைந்து செயற்பட்டு வருகின்றோம் என்றும் கூறினார்.
No comments:
Post a Comment