Saturday, December 15, 2012
கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 800 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இவர்களில் 680 பேர் சுயவிருப்பின் பேரில் திருப்பி அனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலியா குடிவரவு மற்றும் குடியுரிமை விவகாரங்களுக்கான அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாகக படகுகள் மூலம் தமது நாட்டிற்குள் பிரவேசித்தவர்கள் எனவும் அவுஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.
சட்டவிரோதமாக தமது நாட்டிற்குள் பிரவேசிக்கும் அனைவரும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் குடியுரிமை விவகாரங்களுக்கான அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment