Saturday, December 15, 2012
இலங்கை::புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகள், யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு 50 மோட்டார் சைக்கிள்களை வழங்கியமை தொடர்பாக பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களை வழங்க தலையீடுகளை மேற்கொண்ட புலிகளுக்கு ஆதரவான தமிழ் அரசியல்வாதி அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்காக நிதியுதவிகள் லண்டனில் உள்ள புலிகளின் வலையமைப்பினால், வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மாவீரர் தினத்திற்கு முன்னர் இந்த மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment