Saturday, December 15, 2012
இலங்கை::புலிகள் அமைப்பிற்கு நிதி திரட்டும் நோக்கில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை கொன்சோல் ஜெனரல் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் புலிகள் வலையமைப்பை வியாபிக்கும் நோக்கிலும் நிதி திரட்டும் நோக்கில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலிகள் அவுஸ்திரேலியாவில் தங்களது வலையமைப்பை ஏற்படுத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது என அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்படவில்லை.
புலிகளின் எஞ்சிய உறுப்பினர்கள் தொடர்ந்தும் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி இவ்வாறு ஆட்கடத்தல்காரர்கள் பணம் சம்பாதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
புலிகளின் எஞ்சிய உறுப்பினர்கள் நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவி வழங்கும் போர்வையில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அமைப்புக்கள் இரகசியமான முறையில் புலிகளுக்கு உதவிகளை வழங்கி வருவதாக பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment