Thursday, November 1, 2012

அகில கால மீளாய்வு அமர்வுகளில் இலங்கை இன்று விளக்கமளிக்கும்!

Thursday, November 01, 2012
ஜெனீவா::அகில கால மீளாய்வு அமர்வுகளில் இலங்கை இன்று விளக்கமளிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகள் இன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பாகவுள்ளது. இலங்கை நிலைமைகள் தொடர்பில் 99 நாடுகள் பேச உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை நிலைமைகள் தொடர்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான பிரதிநிதிகள் பதிலளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், ஏனைய சிவில் அமைப்புக்களும் இலங்கை விவகாரம் தொடர்பில் கேள்விகளை எழுப்பும் என தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு கிழக்கு ஜனநாயகப்படுத்தல், சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்தல், பயங்கரவாதத் தடைச் சட்டம், கடத்தல் மற்றும் காணாமல் போதல் போன்ற விடயங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட உள்ளன.

மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பில் ஐந்தாண்டு திட்டமொன்றின் அடிப்படையில் இலங்கை எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளது.

கடந்த அகில கால மீளாய்வு அமர்வுகளில் இலங்கை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா என்பது குறித்து இந்தியா, ஸ்பெய்ன் மற்றும் பெனின் ஆகிய நாடுகள் கண்காணிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment