Thursday, November 1, 2012

மாகாண சபை முறையை ஒழிப்பதில் சம்பிக்க, விமல் தீவிரம்!

Thursday, November 01, 2012
இலங்கை::முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, அன்று சர்வதேச அழுத்தங்களுக்கு அடிமைப்பட்டு, தூரநோக்குடன் சிந்திக்காமல் ஏற்படுத்திய மாகாண சபை முறை, இலங்கைக்கு எவ்விதத்திலும் பொருந்துவதில்லை. இது உடனடியாக ஒழிக்கப்பட வேண்டுமென, அஸ்கிரிய பீட மகாநாயக்கர் அதிசங்கைக்குரிய உடுகம ஸ்ரீ புத்த ரக்கித தேரர் மற்றும் மல்வத்து பீட மகாநாயக்கர் அதிசங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் .


நேற்று மகாநாயக்க தேரர்களை சந்தித்ததன் பின்னர், அமைச்சர் விமல் வீரவன்ச, ஊடகங்களுக்கு மேற்படி தரிவிதுள்ளர் .மேலும் அவர்

13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்திற்கு எதிராகவும், மாகாண சபை சட்டமூலத்திற்கு எதிராகவும், இன்னும் சில நாட்களில் விசேட சட்டத்தினூடாக உச்சநீதிமன்றத்திற்கு செல்ல தீர்மானித்துள்ளோம்.

13வது அரசியலமைப்பும், மாகாண சபை முறையும் ரத்து செய்யப்பட வேண்டும். அவற்றை ,ரத்து செய்து, இந்நாட்டின் அபிவிருத்திக்கு பொருந்தக்கூடிய, அரசியலமைப்பில் கை வைக்க முடியாத, பாராளுமன்ற அதிகாரத்தில் கை வைக்காத, புதிய நிர்வாக கட்டமைப்பொன்று, அபிவிருத்திக்கட்டமைபொன்றை ஏற்படுத்துவதில் தவறில்லை.

எனினும் எவராலும் பலாத்காரமாக திணிக்கும் ஒன்றாக அது அமையக்கூடாது. அதனை நாமே தயாரித்துக்கொள்ள வேண்டும். மாகாண சபைகள் பிறரை திருப்திப்படுத்தக்கூடியதாகவே அமைக்கப்பட்டது. தற்போது ,இந்நாட்டு மக்களை திருப்திப்படுத்தக்கூடிய ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் கூட்டாக இணைந்து பாராளுமன்றத்தில் மாகாண சபை முறைமைக்கு எதிராக விசேட பிரேரணை ஒன்றை கொண்டுவர தீர்மானித்துள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment