Thursday, November 01, 2012
இலங்கை::ஓமான் மற்றும் இலங்கைக்கு இடையில் இரு தரப்பு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஓமான் வெளிவிவகார அமைச்சர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார்.
இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதே இந்த உடன்படிக்கையின் நோக்கமென வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் திஸாநாயக்க குறிப்பிட்டார்.
வருடாந்தம் இலங்கையிலோ அல்லது ஓமானிலோ இந்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தெரிவுசெய்யப்பட்ட விசேட துறைகளின் அபிவிருத்திக்கான ஆலோசனைகளை பரிமாற்றிக்கொள்வது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
No comments:
Post a Comment