Thursday, November 1, 2012

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் தொடர்பில் குமரன் பத்மநாதனிடம் இந்திய விசாரணை நடத்தியது!

Thursday, November 01, 2012
இலங்கை::முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் தொடர்பில் முன்னாள்  புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

சீ.பி.ஐ. அதிகாரிகளும், இந்திய புலனாய்வுப் பிரிவு முகவர்களும் அண்மையில் இலங்கைக்கு சென்று குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ராஜீவ் கொலையுடன் தொடர்பு உண்டா என்பது குறித்து குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ராஜீவ் கொலைத் திட்டம் தொடர்பில் குமரன் பத்மநாதன் இந்திய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

எனினும், இந்தத் தாக்குதலுக்கான நிதி உதவிகள் எவ்வாறு கிடைக்கப் பெற்றன என்பது பற்றி தமக்குத் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட காலத்தில் இலங்கைக்கும் மலேசியாவிற்கும் விஜயங்களை மேற்கொண்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலுடன் குமரன் பத்மநாதனுக்கு தொடர்பு இருக்கக் கூடும் என இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் இலங்கை மற்றும் மலேசியாவிடம் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment