Thursday, November 1, 2012

எம்.வீ.சன்சீ கப்பல் மூலம் கடந்த 2010ம் ஆண்டு கனடாவுக்கு சென்ற 492 இலங்கையர்களில் பலர் அகதி அந்தஸ்துக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

Thursday, November 01, 2012
எம்.வீ.சன்சீ கப்பல் மூலம் கடந்த 2010ம் ஆண்டு கனடாவுக்கு சென்ற 492 இலங்கையர்களில் பலர் அகதி அந்தஸ்துக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில் இதில் 20 பேருக்கு மாத்திரமே இதுவரையில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

கனடாவின் நாடாளுமன்ற (புலிகளின்) உறுப்பினர் ராதிகா சிற்சபேசனுக்கு கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் விக் டோயிஸ் இந்த தகவலை வழங்கியுள்ளார்

இந்த அகதிகளுள் 35 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இரண்டு பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் இலங்கைக்கும், மற்றையவர் இந்தியாவுக்கும் நாடுகடத்தப்பட்டனர்.

அத்தடன் 23 பேர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என்று கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

எஞ்சியுள்ள 414 பேரினதும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன என்றும் விக் டோயிஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment