Thursday, November 1, 2012

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷிடிற்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும் இடையில் பேச்சுவார்த்தை!

Thursday, November 01, 2012
இலங்கை::புதிய இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷிடிற்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. ஈரான், இலங்கை, ஓமான், கென்யா, மடகஸ்கர் மற்றும் ஷிசில்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் புதிய இந்திய வெளிவிவகார அமைச்சர் விசேட சந்திப்புக்களை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய இனப்பிரச்சினைக்கு துரித கதியில் அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டமொன்றை முன்வைப்பது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, யுத்த நிறைவின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment