Thursday, November 1, 2012

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை மாற்ற போவதுமில்லை எனவும் தாம் அரசாங்கத்தில் இருந்து விலக போவதுமில்லை எனவும் அமைச்சர் திலான் பெரேரா தெரிவித்துள்ளார்!

Thursday, November 01, 2012
இலங்கை::13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை மாற்ற போவதுமில்லை எனவும் தாம் அரசாங்கத்தில் இருந்து விலக போவதுமில்லை எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் திலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ, மாகாண சபை உறுப்பினர்களோ, சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளும் போது, 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு விருப்பமா இல்லையா என்று சத்தியப்பிரமாணம் செய்வதில்லை. நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளதாக கூறியே சத்தியப்பிரமாணம் செய்கின்றனர்.

மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பிலவோ, ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர்களோ, 13வது அரசியல் அமைப்புத்திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டு சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவில்லை.

13வது அரசியல் அமைப்புத்திருத்தச் சட்டத்தில் குறைகள் இருந்தால், அதனை திருத்துவத்தை விடுத்து, அந்த சட்டத்தை இரத்துச் செய்ய போவதில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் திலான் பெரேரா, ஜாதிக ஹெல உறுமயவிற்கு நாடாளுமன்றத்தில் மிகவும் குறைந்தளவான பலமே இருப்பதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 116 உறுப்பனிர்கள் இருப்பதாகவும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜாதிக ஹெல உறுமய, 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான மூன்றில் இரண்டு பெருபான்மை பலத்தை எப்படி பெற்று கொள்ளும் என்பது சிக்கலுக்குரியது எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment