Monday, November 26, 2012
ஆலந்தூர்::ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு இன்று காலை 11.45 மணி அளவில் 146 பயணிகள், 9 சிப்பந்திகளுடன் விமானம் வந்தது. தரை இறங்கி ஓடுபாதையில் விமானம் ஓடிய போது முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் விமானம் குலுங்கியது.
பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். விமானி சாமர்த்தியமாக ஓடுபாதையில் சரியான இடத்தில் விமானத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள், விமான நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து 155 பேரையும் பத்திரமாக மீட்டு அழைத்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் மதியம் 12-30 மணிக்கு ஓமன் நாட்டுக்கு திரும்ப வேண்டிய அந்த விமானம் தாமதமாக இரவு 11 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.
No comments:
Post a Comment