Monday, November 26, 2012

இலங்கை சிறைச்சாலைக்குள் ஸ்கேனர் இயந்திரங்களை பொறுத்த நடவடிக்கை

Monday, November 26, 2012
இலங்கை::சிறைச்சாலைக்குள் சட்டவிரோத பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றமையை தவிர்ப்பதற்காக ஸ்கேனர் இயந்திரத்தை பொறுத்த சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெலிக்கடை, மஹர மற்றும் போகம்பர ஆகிய சிறைச்சாலைகளில் ஸ்கேனர் இயந்திரத்தை பொறுத்தவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ்.விதானகே தெரிவித்துள்ளார்.

விசேடமாக கையடக்கத் தொலைபேசிகள் போன்ற பொருட்கள் கொண்டு செல்லப்படுவதனை தவிர்க்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment