Tuesday, October 30, 2012
சென்னை::மழை காரணமாக சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நாகைக்கும் நெல்லூருக்கும் இடையே நாளை பிற்பகல் கரை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது.
அதிகாலை முதலே மழை பெய்து வருவதால், காலையில் ம்பெனிகளுக்கு வேலைக்கு செல்பவர்களும், கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு செல்லும் வியாபாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர். கடந்த வாரம் தொடர்ந்து பெய்த மழையினால் சென்னையில் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. இதனால் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது. இதன் காரணமாக சாலைகளில் கருங்கல் ஜல்லிகள் சாலை முழுவதும் சிதறி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலைகளில் சிதறி கிடக்கும் கருங்கல் ஜல்லிகளில் சிக்கி கீழே விழும் காட்சிகளும் தினமும் நடக்கிறது.
இப்படி சாலைகளில் சிதறி கிடக்கும் ஜல்லிகளை அகற்றாமலும், குண்டும் குழியுமாக உள்ள இடங்களில் தற்காலிமாக செங்கற்களை கொண்டு ஒட்டுப் பணி போடாமலும் இருக்கும் நிலையில் மீண்டும், இன்று மழை பெய்ய தொடங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாலைகளில் தேங்கி கிடக்கும் மழைநீர் அகற்றப்படாமல் இருப்பதால் பல இடங்களில் காலை முதலே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு, குறித்த நேரத்தில் பணிக்கு போகமுடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இன்னொரு பக்கம் குப்பைகளும் அகற்றப்படாமல் ஆங்காங்கே தேங்கி இருக்கிறது. இப்படி தேங்கி இருக்கும் குப்பைகளில் மழைநீரும் சேர்வதால் துர்நாற்றமும் வீசுகிறது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...
வங்க கடலில் தீவிர காற்றழுத்த மண்டலம் : புயல் நாளை கரை கடக்கும்!

வங்க கடலில் நிலைக் கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல்) மாறியுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 450 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள புயல், நாளை பிற்பகல் கரை கடக்கும். இதனால் 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை, காஞ்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதற்கு அடையாளமாக, கடந்த 18ம் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இதனால் தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து நல்ல மழை பெய்தது.
தற்போது மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அந்தமான் அருகே உருவானது. அது கடந்த 2 நாட்களாக மெல்ல மேற்கு நோக்கி நகர்ந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு அது வங்க கடலில் தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு திசையில் நிலை கொண்டிருந்தது. அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேலும் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல்) மாறியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று அதிகாரப்பூர்வமாக புயல் என்று அறிவிக்கப்பட்டால், அதற்கு நிலம் என்று பெயரிடப்படும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 450 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதனால், நேற்று முதலே தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, நாகை, கடலூர், புதுச்சேரி உள்ள எல்லா துறைமுகங்களிலும் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டது. மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. பல ஆயிரக்கணக்கான படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக கடலோர பகுதிக்கு புயல் நெருங்கி வருவதால், காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. 6085 கிலோ மீட்டராக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் அதிக கடல் சீற்றம் காணப்பட்டது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய கடலோர பகுதிகளில் அதிக பாதிப்பு இருக்கும் என்பதால், அந்த பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் விழுப்புரம் கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், திருவாரூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Ôமாநிலத்தில் பரவலாக அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை கொட்டும். நாளை பிற்பகல் நாகப்பட்டினம் நெல்லூர் ஊடாக கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் 16.6, நாகப்பட்டினம் 82.7, பாம்பன் 36.2, புச்சேரியில் 70.9 மி.மீ. மழை பதிவாகி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது, மின்சாரம் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment