Tuesday, October 30, 2012
இலங்கை::திவிநெகும சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் சட்டவிளக்கம் இன்று ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு கையளிக்கப்படவுள்ளது.
கடந்த 22 ம் திகதி திவிநெகும சட்டமூலம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த மனு உயர் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
திவிநெகும சட்டமூலம் தொடர்பில் மாகாண சபைகளிடம் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதன்படி, வடமாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் திவிநெகும சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
எனினும், திவிநெகும சட்டமூலத்திற்கு சார்பாகவும், எதிராகவும் 14 மனுக்கள் உயர் நிதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அவற்றை, பிரதம நிதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தலைமையிலான குழு விசாரணை செய்தது.
இதனையடுத்து மாகாண சபைகளில் ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் திவிநெகும தொடர்பில் முன்வைத்த நிலைப்பாடுகள் ஆராயப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தின் சட்டவிளக்கம் ஜனாதிபதி மற்றும் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment