Tuesday, October 30, 2012
மீனம்பாக்கம்::கட்டுக்கட்டாக போலி விசாக்களுடன் இலங்கை செல்ல இருந்த பயணி கைது செய்யப்பட்டார். அவர் தீவிரவாதியா என போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் ஏர்போர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நேற்று மாலை கொழும்புக்கு ஜெட் ஏர்வேஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராகி கொண்டிருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். இலங்கையை சேர்ந்த முகமது நாசர் (35) என்பவர் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்து விட்டு கொழும்புக்கு செல்ல இருந்தார்.
அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர சோதனை செய்ததில் பனியனுக்குள் மறைத்து வைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் பை சிக்கியது. அதில் 50க்கும் மேற்பட்ட போலி விசாக்கள் இருந்தன. சவுதி அரேபியா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளின் விசாக்கள் போல் இருந்தன. இதையடுத்து அவரிடம் சுங்க அதிகாரிகள் விசாரித்தனர். ‘எனக்கு எதுவும் தெரியாது. சென்னையில் இருவர் என்னை அணுகி, இந்த கவரை கொடுத்தனர். ‘வெறும் பேப்பர்தான் உள்ளது, கொழும்புக்கு கொண்டு செல்லுங்கள், அங்கு வந்து வாங்கிக் கொள்கிறோம்’ என்று கூறினர். ரூ.2 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு கவரை வாங்கிக் கொண்டு வந்தேன் என்று முகமது நாசர் கூறினார்.
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லும் தீவிரவாதிகளுக்காக இந்த விசாக்களை கொண்டு செல்வதற்கு வாய்ப்பு இருப்பதால் அதிகாரிகள் உஷாரானார்கள். கைப்பற்றப்பட்ட போலி விசாக்கள், குடியுரிமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து முகமது நாசர் கைது செய்யப்பட்டார். அவரிடம், சுங்க அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள், கியூ பிராஞ்ச் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர். முகமது நாசர், தீவிரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. விசா எங்கு தயாரிக்கப்பட்டது, யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள், கொழும்பில் இருந்து விசாக்களை எங்கு கொண்டு செல்ல திட்டமிருந்தார்கள் என்பது பற்றி தீவிர விசாரணை நடக்கிறது.

No comments:
Post a Comment