Monday, October 01, 2012
இலங்கை::சிறுவர்களுக்கான மகிமை பொருந்திய நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்;த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சிறுவர்களுக்காக வாழ்த்து தெரிவிக்க கிடைத்தமை மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அபிவிருத்தியை விரைவுப்படுத்துவதும், வானூர்தி நிலையங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் என்பன அமைக்கப்படுவது என்பன எதிர்கால சிறுவர்களுக்காகவே எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் டி எம் ஜயரட்ண விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நாளைய உலகம் சிறுவர்களை நம்பியே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நாளைய உலகம் என்பது இன்றைய சிறுவர்களாலேயே உறுதிப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறை உலக சிறுவர்கள் தினம் “சிறுவர்கள் உலகம் சிறுவர்களுக்கே என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் சிறுவர்களின் பாதுகாப்பிற்காக சமூதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நாம் அனைவரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று அந்த சபையின் தலைவர் அனோமா திஸாநாயக குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment