Monday, October 01, 2012
ராமேஸ்வரம்::ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை, நடுக்கடலில் இலங்கைக் கடற்படையினர் விரட்டியதால், நள்ளிரவில் கரை திரும்பினர்.
டீசல் விலை உயர்வால் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வந்த ராமேஸ்வரம் மீனவர்கள், 15 நாட்களுக்குப்பின், நேற்று முன்தினம், மீன்பிடிக்கச் சென்றனர். மாலையில், 800க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில், கச்சத்தீவு கடல் பகுதிக்குள் சென்ற மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் மறித்து, தங்கள் பகுதிக்குள் நுழையவிடாமல் விரட்டினர்.
இதுபோல், தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட கடல் பகுதிக்குள் சென்ற மீனவர்களையும், தடுத்த இலங்கைக் கடற்படையினர், மீன்பிடிச் சாதனங்களை சேதப்படுத்தி விரட்டினர்.
இதனால், 15க்கும் மேற்பட்ட படகுகள், நேற்று முன்தினம் நள்ளிரவில் திரும்பின. இலங்கைக் கடற்படையினர் பார்வையில் சிக்காத மீனவர்கள் வழக்கம்போல், இறால் மீன் பிடித்து, நேற்று காலையில் திரும்பினர். "இலங்கைக் கடற்படையினரின் நடவடிக்கைக்குப் பயந்து திரும்பியதால், எதிர்பார்த்த அளவிற்கு, இறால் மீன்பாடு இல்லை' என, கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment