Monday, October 01, 2012
ராமேஸ்வரம்::தனுஷ்கோடியில் மர்ம படகில் வந்திறங்கிய இலங்கையரை, போலீசார் கைது செய்தனர். ராமேஸ்வரம் தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடல் பகுதியில், நேற்று முன்தினம் வந்த, இலங்கைப் படகில் இருந்து சிலர் வந்திறங்கிச் சென்றனர். இவர்களில், தலைமன்னாரைச் சேர்ந்த அனோஜ்,22, என்பவரை, ராமேஸ்வரம் கியூ பிரிவு போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், "இலங்கையில் வியாபாரம் செய்ததாகவும், நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திருப்பிக் கொடுக்க வழியில்லாமல், படகோட்டிக்கு, 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து, தனுஷ்கோடி அரிச்சல்முனை வந்ததாகவும் தெரிவித்தார்.
தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்ட அனோஜை, போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment