Monday, October 1, 2012

இந்தியாவை ஆளும் தகுதி ஜெ.,விற்கு உள்ளது' அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்! புகழாரம்

Monday, October 01, 2012
திருவாரூர்:: "இந்தியாவில் அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் தகுதி ஜெ.,வுக்கு மட்டும் தான் உள்ளது' என, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
நாகபட்டினம் லோக்சபா தொகுதி அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் நடந்தது. காமராஜ் தலைமை தாங்கினார். நகர செயலர் மூர்த்தி வரவேற்றார். அமைச்சர் ஜெயபால் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்திலிங்கம் உட்பட பலர் பேசினர்.

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: அ.தி.மு.க., மிகுந்த கட்டுப்பாடு மிகுந்த கட்சி.தமிழகத்தில் மூன்றாவது முறையாக முதல்வராக உள்ள ஜெ.,வின் தொலை நோக்குத் திட்டங்கள் மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது. நூறு ஆண்டில் செய்ய வேண்டிய திட்டப்பணிகளை ஓராண்டில் செய்து சாதனைப் படைத்துள்ளார் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு ஜெ.,வின் நிர்வாகத் திறனைக் கண்டு பயம் வந்துவிட்டது."டெசோ' மாநாட்டை கையில் எடுத்துக் கொண்டு கபட நாடகம் ஆடுகிறார்.

மத்திய அரசில், தி.மு.க., 13 ஆண்டுகள், கூட்டணி வைத்து, தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்னைக்கு எந்த நடவடிக் கையும் மேற்கொள்ளவில்லை. ஒன்பது ஆண்டுகளாக கூட்டாமல் இருந்த, நதிநீர் ஆணையம், ஜெ., கோரிக்கையால் கூட்டப்பட்டது. தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்று சுப்ரீம் @கார்ட் உத்தரவிட்டுள்ளது. நிர்வாகத் திறன் இல்லாமல் இருக்கும் ஒருவர், நாட்டின் பிரதமராக இல்லாமல் இருப்பதே மேல். இந்தியாவில் அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் தகுதி இந்தியாவிலேயே ஜெ.,வுக்கு மட்டும் தான் உள்ளது. இந்திய நாட்டை அரசாளும் தகுதியும் அவருக்குத் தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment