Monday, October 01, 2012
டோக்கியோ::படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத வயதானவர்களுக்காக பிரத்யேக கருவியை ஜப்பான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்கள் சிறுநீர், மலம் கழித்தால் ஆட்டோமேடிக் கருவி கழுவி துடைத்து சுத்தம் செய்துவிடும். ஜப்பானில் சீனியர் சிட்டிசன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு பயன்படும் கருவிகளை பல்வேறு நிறுவனங்களும் தொடர்ந்து தயாரித்து வருகின்றன. முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கருவிகள், தொழில்நுட்ப வசதிகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் வகையில் தலைநகர் டோக்கியோவில் சர்வதேச கண்காட்சி நடந்தது. இதில், ‘மசில்கார்ப்’ என்ற நிறுவனத்தின் தயாரிப்பான ‘ரோபோ ஹெல்ப்பர் லவ்’ என்ற கருவி பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இது ஆட்டோமேடிக் டாய்லெட் வாஷ் கருவியாகும். ஆங்கில ‘யு’ எழுத்து வடிவில் இருக்கிறது.
படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகள், முதியோரின் இரு கால்களுக்கும் நடுவே சிறுநீர், மல துவாரங்களை மூடும் வகையில் கவை போல இந்த கருவியை பொருத்த வேண்டும். சிறுநீர், மலம் வெளியேறுவதாக சென்சார் மூலம் தெரியவந்தால், உடனே பிரத்யேக குழாய் மூலம் அவை உறிஞ்சப்பட்டு, வெளியேற்றப்படும். கிருமிநாசினி கலந்த தண்ணீர் உடனே அப்பகுதியில் ஸ்பிரே செய்யப்படும். சூடான காற்று செலுத்தி அப்பகுதிகள் காயவைக்கப்படும்.

No comments:
Post a Comment