Monday, October 29, 2012

கருணாநிதி மீது அவதூறு வழக்கு ஒ.பன்னீர் செல்வம் தொடர்ந்தார்!

Monday, October 29, 2012
சென்னை::நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பாக, மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஆகஸ்ட் 22ம் தேதி நாளிட்ட ஆனந்த விகடன் இதழில் வந்துள்ள கட்டுரையில், ‘‘பதவி பிரமாணத்தை குடும்ப தலைவர்கள் ஏற்றுக்கொண்டாலும் குடும்ப உறுப்பினர்கள் மூலம் பைல்களை கிளீயர் செய்வது நடக்கிறது. ஒ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் அரசியல் ரீதியாகவும் ஆட்சியல் ரீதியாகவும் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள்.

அமைச்சரின் தம்பியும் தன் பங்குக்கு ஆக்டிவ்வாக இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி, ஆகஸ்ட் 23ம் தேதி முரசொலி நாளிதழில் கலைஞர் கேள்வி பதிலில் இடம் பெற்றுள்ளது. இது அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, செய்தி வெளியிட்ட முரசொலி செல்வம், திமுக தலைவர் கருணாநிதி மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆனந்த விகடன் பதிப்பாளர், வெளியீட் டாளர், ஆசிரியர், நிருபர் ஆகியோர் மீதும் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment