Monday, October 01, 2012
இலங்கை::இந்திய விஜயத்திற்கான நிகழ்ச்சி நிரல் விரைவில் கிடைக்கப் பெறும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய விஜயம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் இந்த வாரமளவில் கிடைக்கப்பெறும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இந்திய மத்திய அரசாங்கம் அண்மையில் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அரசியல் தீர்வுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பிரதமர் மன் மோகன் சிங் உள்ளிட்ட மத்திய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் நிகழ்ச்சி நிரலை வழங்கிய பின்னரே என்ன விடயங்கள் பற்றி பேசப்படும் என்பது பற்றி சரியாகக் குறிப்பிட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் 10ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.
No comments:
Post a Comment