Monday, October 1, 2012

இலங்கையில் மரண தண்டனை நீக்கப்பட வேண்டுமென இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது!

Monday, October 01, 2012
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அனைத்துலக ஆவர்தன பரிசீலனையின் போது ஆராயப்படவுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில், 'இலங்கையில் மரண தண்டனையை நீக்க வேண்டும்' என சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.


அத்துடன், சில மாற்றங்களுடன் தகவல் பெறும் உரிமை சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வெண்டுமெனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மேற்படி அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி ஆராயப்படவுள்ள இலங்கை மனித உரிமைகளின் நிலைமை பற்றி வெளிவிவகார அமைச்சும் தனியாக ஓர் அறிக்கையை தயாரித்துள்ளது.

இவற்றைவிட, மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம், சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைள் கண்காணிப்பகம் என்பவையும் தமது கருத்தக்களை சமர்ப்பிக்கவுள்ளன.

மனித உரிமைகள் தொடர்பாக சர்வதேச ஒப்பந்தம் மீறப்படுவது பற்றி மனித உரிமைகள் குழுவுக்கு தனியார் முறையிட வகைசெய்யும் முதலாம் சமவாயத்திலும் மரண தண்டனையை நீக்கும் 2ஆம் சமவாயத்திலும் இலங்கை இன்னும் கையொப்பமிடவில்லை என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் டாக்டர் பிரதீப மஹாநாமஹேவ தெரிவித்தார்.

மரண தண்டனை செயற்படுத்தப்படாத நிலைமையில் அதனை நீக்கிவிடுவதே நல்லது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment