Tuesday, October 30, 2012

இலங்கைக்கு எதிரான ஐ.நா. விசாரணையில் பா.ம.க. கலந்துகொள்ளும்: (புலி பினாமி) ராமதாஸ் அறிவிப்பு!

Tuesday, October 30, 2012
சென்னை::பா.ம.க. நிறுவனர் (புலி பினாமி) டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற போரின் போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை சிங்களப் படையினர் கொடூரமான முறையில் படுகொலை செய்தனர். இதற்காக இலங்கை ஆட்சியாளர்கள் மீது போர்குற்ற விசாரணை நடத்தவேண்டும் என்ற முழக்கம் உலகெங்கும் எழுந்துள்ளது.

இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணையின் முதற்கட்டமாக நாளை (31-ந் தேதி) நடைபெறும் விசாரணையில் மனித உரிமை அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க உள்ளன.

அதைத்தொடர்ந்து நவம்பர் 1-ந் தேதி இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் குறித்த இறுதி விசாரணை நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் நவம்பர் மாதம் 5-ந் தேதி அறிவிக்கப்பட உள்ளன. என்னை (ராமதாஸ்) நிறுவனராக கொண்டு செயல்படும் பசுமைத்தாயகம் ஐ.நா.வின் சிறப்பு ஆலோசனைக் குழுவாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், இந்த விசாரணையில் பங்கேற்க பசுமைத்தாயகம் அமைப்பிற்கு ஐ.நா.மனித உரிமை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி நாளை நடைபெறவுள்ள விசாரணையில் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பங்கேற்று இலங்கை மீது ஏன் போர்குற்ற விசாரணை நடத்தவேண்டும்? என்பதற்கான வாதங்களை முன்வைக்க உள்ளார்.

வருகிற 1-ந் தேதி நடைபெறவுள்ள விசாரணையில் ஜி.கே.மணியுடன் பசுமைத்தாயகம் அமைப்பின் செயலாளர் அருளும் கலந்து கொள்கிறார். பின்னர், இங்கிலாந்து அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவும், பிரிட்டிஷ் தமிழ் பேரவையும் இணைந்து 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்ற அரங்கில் நடத்தவிருக்கும் சர்வதேச தமிழ் மாநாட்டிலும் இருவரும் பங்கேற்பார்கள்.

இந்த மாநாட்டிலும் இலங்கைக்கு எதிராக போர்குற்ற விசாரணை நடத்த வேண்டும் - இலங்கை இனச் சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக, உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தி தனித் தமிழீழம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். இலங்கைக்கு எதிரான விசாரணையின் போது இந்தியா நடுநிலையுடன் செயல்பட்டு, இலங்கைக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment