Tuesday, October 30, 2012
இலங்கை::யாழ் மாநகர சபைக்குட்பட்ட கரையோரப்பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கும், கழிவகற்றல் செயன்முறையை வினைத்திறனாக மேற்கொள்வதற்காகவும், கனரக வாகனங்களை யாழ் மாநகர சபைக்கு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
யாழ் மாநகர சபை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி வாகனங்களை யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவிடம் கையளித்தார்.
கழிவுநீர் பவுசர், குப்பை சேரிக்கும் வண்டி, பக்கோ இயந்திரம் என்பன ஆளுநரினால் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வட மாகாண பிரதம செயலாளர் திருமதி. விஜயலட்சுமி ரமேஸ், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment