Tuesday, October 30, 2012

போர் குற்றங்களுடன் தொடர்புடைய புலிகளின் உறுப்பினர்கள் அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் - திசர சமரசிங்க!

Tuesday, October 30, 2012
இலங்கை::போர் குற்றங்களுடன் தொடர்புடைய புலிகளின் உறுப்பினர்கள் அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் பெறுவதாகவும் அவர்கள் இலங்கையில் எஞ்சியிருக்கும் புலிகளின் போர் குற்றவாளிகளை அங்கு வரவழைக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம், அவுஸ்திரேலிய அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.

குற்றங்களுடன் தொடர்புடைய முன்னாள் புலிகளின் உறுப்பினர்கள் 6 பேர் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த கைதுசெய்யப்பட்டதை அடுத்தே இந்த தகவல் தெரியவந்துள்ளது. தாம் அவுஸ்திரேலியா செல்ல நிதி வழங்குவது அவுஸ்திரேலியாவில் இருக்கும் புலிகளின் உறுப்பினர்கள் என விசாரணைகளின் போது சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்க இது குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கவனத்து கொண்டு சென்றுள்ளார். அதேவேளை அவுஸ்திரேலியா இதுவரை அங்கிருந்து 15 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ளது.

No comments:

Post a Comment