Monday, October 29, 2012
இலங்கை::யுத்தத்திற்கு செலவிடப்பட்ட பெருந்தொகை நிதி இன்று எமது சமூகத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவே பாதிப்பை எதிர்கொண்ட மக்களின் மேம்பாட்டுக்கு அதில் அரை மடங்கு நிதியேனும்; செலவிடப்படவேண்டுமென ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று உடுவில் வாழ்வகம் இல்லத்தினால் 75 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட அரங்கத்தினை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று எமது சமூகத்தில் மாற்றுவலுவுடையோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த காலத்தில் நாம் எதிர்கொண்ட யுத்தம் இதற்கு முக்கியகாரணமாகும் எனவே இம்மாற்றுவலுவுடையோருக்கு பக்கபலமாக செயற்படவேண்டிய கடப்பாடு எம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அந்த வகையில் விழிப்புலனற்றவர்கள் சாதாரணமானவர்கள் என்ற உணர்வுடன் வாழக்கூடிய நிலையை இந்த வாழ்வகம் அவர்களுக்கு வழங்கி வருகின்றது. இதேவேளை எமதுசமூகத்திலேய விழிப்புலன் பாதிப்பை மட்டுமன்றி ஏனைய பாதிப்புக்களை எதிர்கொண்டவர்களும் பலர் அங்கவீனர்களாகவும், உளப்பாதிப்புக்குள்ளானவர்களாகவும், விதவைகளாகவும் இருக்கின்றார்கள். இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகையில் இவ்வாறான பாதிப்புக்களை அதிகம் எதிர்கொண்டது எமது சமூகமே இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் இதற்காக புலம் பெயர் நாடுகளில் வாழும் உறவுகளும் உதவ முன்வர வேண்டுமெனக் குறிப்பிட்ட சந்திரகுமார் அவர்கள்,
நடந்து முடிந்த யுத்தத்திற்காக மிகப் பெருந்தொகையான நிதி செலவிடப்பட்டிருக்கின்றது. அது எம்மிடையே மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது ஆகவே யுத்தத்திற்காக செலவிடப்பட்ட நிதித்தொகையிலிருந்து அரைவாசித் தொகையேனும் அதன் தாக்கத்தை எதிர்கொண்ட பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக
செலவிட வேண்டிய பொறுப்பை அனைவரும் உணரவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அத்தோடு இவ்வாறான மாற்றுவலுவுள்ளோர்களின் ஒட்டுமொத்த சமூகப் பொறுப்பு அவசியமாகின்றது. அன்னை லட்சுமி அம்மா அவர்களின் கருணையால் இன்று இந்தவாழ்வகம் வளர்ந்து நிற்கின்றது. அவரை பின்பற்றி செயற்பட்டு வரும் இன்றைய செயற்பாட்டாளர்களையும் நான் பாராட்டுகிறேன். அத்தோடு இவ்இல்லத்தின் மேம்பாட்டுக்காக எமது சக்திக்கு உட்பட்டதும், அப்பாற்பட்டதுமான பணிகளை மேற்கொள்ள தயாராகவுள்ளோம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மேலும் குறிப்பிட்டார்.
அத்தோடு வாழ்வகத்தை அறக்கட்டளை மையமாக பாராளுமன்றத்தில் பதிவு செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்வதாகவும் அவர் உறுதியளித்தார்.
கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி அம்மாவினால் 1985 ம் ஆண்டு தெல்லிப்பளையில் ஆரம்பிக்கப்பட்ட வாழ்வகம் பல வளர்ச்சி கட்டங்களை எட்டி இன்று உடுவிலில் மாடிக்கட்டிடத்தில் சுமார் 75 இலட்சம் பெறுமதியான அரங்க ஒன்று கூடல் மண்டபத்தினை அமைக்கும் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. நிகொட் நிறுவனத்தின் நாற்பது இலட்சம் ரூபா நிதியுடனும், வாழ்வகம் இல்லத்தின் 35 இலட்சம் ரூபா நிதியுடனும் அமைக்கப்பட்ட இவ் அரங்கத்தினை இன்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் திறந்து வைத்தார்.
வாழ்வக இல்லத்தின் தலைவர் இரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உடுவில் பிரதேச செயலர் நந்தகோபாலன், வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினரும், ஈ.பி.டி.பியின் வலிகாமம் அமைப்பாளருமான சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்), நிகொட் நிறுவனத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment