Monday, October 29, 2012
நியூயார்க்::அமெரிக்காவின் நியூயார்க் நகரை இன்று இரவு பயங்கர சூறாவளி தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நகர மக்கள் பீதியில் உள்ளனர். சூறாவளியின் போது பயங்கர காற்று வீசும், வெள்ளம் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் மெட்ரோ ரயில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இன்றும், நாளையும் போக்குவரத்து நிறுத்தப்படும். நியூயார்க் நகரில் உள்ள 4 விமான நிலையங்களில் இருந்து புறப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment