Monday, October 29, 2012

ஜெயலலிதாவை சந்தித்த தேமுதிக உறுப்பினர்களுக்கு இருக்கை மாற்றம்!

Monday, October 29, 2012
சென்னை::தேமுதிக உறுப்பினர்கள் மைக்கேல் ராயப்பன், அருண் பாண்டியன், சுந்தரராஜன், தமிழழகன் ஆகியோர் 2 நாட்களுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவை, தலைமை செயலகத்தில் சந்தித்தனர். தங்களின் தொகுதி வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற சட்டபேரவை வைர விழா நினைவு வளைவு அடிக்கல் நாட்டு விழாவில், இந்த 4 எம்எல்ஏக்களுக்கும் முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது.

பின்னர் சட்டசபை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, 4 எம்எல்ஏக்களும் சட்டமன்றத்துக்கு வந்தனர். அதற்கு முன்பு சட்டசபையில் அருண் பாண்டியனுக்கு எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் இருக்கையின் பின்பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதேபோல் மைக்கேல் ராயப்பன், சுந்தர்ராஜன், தமிழழகன் ஆகியோருக்கும் வேறு வேறு இடங்களில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று இந்த 4 உறுப்பினர்களுக்கும் தேமுதிகவினர் அமர்ந்திருக் கும் டிவிஷனில் 5வது வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment