Tuesday, October 30, 2012

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி விடுதலை!

Tuesday, October 30, 2012
கோபி::கன்னட நடிகர் ராஜ்குமார் 30.7.2001 அன்று ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூரில் உள்ள பண்ணை வீட்டில் குடும்பத்தினர்  மற்றும் உதவியாளர்களுடன் தங்கியிருந்தார். அப்போது வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் ராஜ்குமார் மற்றும் அவரது உதவியாளர்களை சத்தியமங்கலம்  வனப்பகுதிக்கு கடத்தி சென்றனர். பின்னர் பணயத்தொகை பலகோடி ரூபாய் கொடுத்து, ராஜ்குமார் மீட்கப்பட்டார். இந்த பணயத்தொகையை வீரப்பன் தனது மனைவி முத்துலட்சுமி உள்ளிட்ட 26 பேரிடம் கொடுத்து வைத்ததாக கூறி, 2001ம் ஆண்டு கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கோபி 3வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் நேற்று தீர்ப்பு கூறினார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஏற்கனவே இறந்து விட்ட தங்கவேல், கனகராஜ் ஆகியோரைத் தவிர மீதமுள்ள 24 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். இதில் 13 பேருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை  விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உள்பட 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பு கூறப்பட்டதும் தண்டனை பெற்ற 13 பேரும் கதறி அழுதனர்.

No comments:

Post a Comment