Tuesday, October 30, 2012

15 கொலைகள் மற்றும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் கோஷ்டியொன்றின் தலைவர் கைது!

Tuesday, October 30, 2012
இலங்கை::15 கொலைகள் மற்றும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் கோஷ்டியொன்றின் தலைவரொருவரை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கொஸ்கொட பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி நபர், இந்தியாவுக்கு தப்பிச் சென்று அங்கு தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று நாடு திரும்பியதை அடுத்து புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

கொஸ்கொட, அம்பலாங்கொடை, ஊறுகஹ, அஹுங்கல்ல மற்றும் கரந்தெனிய போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராகக் கருதப்பட்ட இவர், சிங்கப்பூருக்கு தப்பிச் சென்று   அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் இந்தியாவுக்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்தார் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்து.

சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அவர், கொழும்பு புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment