Tuesday, October 30, 2012

தொடர்ந்தும் பயிற்சி பெற்றுவரும் 782 முன்னாள் புலிபோராளிகள்!

Tuesday, October 30, 2012
இலங்கை::புலிகள் அமைப்பைச் சேர்ந்த 782 முன்னாள் போராளிகள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய புனர்வாழ்வு நிலையங்களில் தொடர்ந்தும் பயிற்சி பெற்று வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் குறிப்பிடுகிறார்.

நான்கு புனர்வாழ்வு நிலையங்களில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டிஆரச்சி தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த 12 ஆயிரம் முன்னாள் புலிபோராளிகளில், பெரும்பாலானவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு ஏற்கனவே சமூகமயப்படுத்தப்பட்டுள்ளதாகவுதம் அவர் குறிப்பிடுகிறார்.

மேலும் 32 முன்னாள் புலிபோராளிகளை அடுத்த மாதம் சமூகமயப்படுத்த உத்தேசித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment