Monday, October 1, 2012

தீவிரவாதத்தை தோற்கடிக்க அண்டை நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதி!

Monday, October 01, 2012
நியூயார்க்::தெற்கு ஆசியாவில் அமைதியும், வளமையும் செழிக்கச் செய்யவும், தீவிரவாதத்தை தோற்கடிக்கவும் அண்டை நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதி கொண்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கிருஷ்ணா அமெரிக்கா வந்துள்ளார். அப்போது ரோடி தீவில் உள்ள புகழ் வாய்ந்த எல்வி லீக் பிரவுன் பல்கலைக்கழகத்தில் 21ம் நூற்றாண்டில் இந்திய வெளிநாட்டு கொள்கை முன்னுரிமைகள் என்ற தலைப்பில் மாணவர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:அண்டை நாடுகளுடனும், உலக வல்லரசுகளுடனும் இணைந்து தீவிரவாதத்தை தோற்கடிக்கச் செய்யும் பணிகளை செய்ய இந்தியா உறுதி கொண்டுள்ளது.

பாகிஸ்தானுடன் உறவுகளை மேம்படுத்தவும், வர்த்தகத்தை அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருநாட்டு மக்களிடையே தொடர்புகளை வளர்க்க விசா வழங்கும் நடைமுறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் போரால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சீர்படுத்த இந்தியா ஒத்துழைப்பை நல்கி வருகிறது. ஆப்கானிஸ்தானை முக்கியத்துவம் வாய்ந்த நாடாக ஏற்று கட ந்த ஆண்டு ஒப்பந் தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

தெற்கு ஆசியாவில் அமைதி மற்றும் வளமை ஏற்படுவதற்கே இந்திய வெளியுறவுக் கொள்கையில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.இந்தியாவில் சகிப்புத்தன்மையின்மை, வேறுபாடுகள், வன்முறை போன்ற சக்திகளின் தாக்கம் இருந்தாலும் அனைவரும் ஒரே மக்கள், ஒரே நாடு என்ற உரத்த சிந்தனை கொண்டுள்ளனர் என்று கூறினார்.

No comments:

Post a Comment