Monday, October 1, 2012

காவல்துறையின் அநீதிகளுக்கு நட்டஈடு!

Monday, October 01, 2012
இலங்கை::காவல்துறையிடம் நீதியை பெற்றுக்கொள்வதற்கு செல்லும் தருணத்தில் அநீதிக்கு முகம்கொடுப்பவர்களுக்கு நட்டஈட்டை வழங்கும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த காவல்துறை ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

இதுகுறித்த சட்டத்தை தயாரிப்பது தொடர்பில் அரசாங்கத்திடம் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு தயாராகி வருவதாக ஆணைக்குழுவின் செயலாளர் ரி.எம்.கே.பி.தென்னகோன் தெரிவித்துள்ளார்.

சில சமயங்களில் தவறிழைக்காத ஆட்கள் கைது செய்யப்படுவதன் காரணமாக அவர்களின் கீர்த்தி நாமத்திற்கு அவதூறு ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக தமது ஆணைக்குழுவுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுதவிர, அவர்கள் பணியாற்றும் நேரங்களில் அவர்களுக்கு இடையூறுகளும் ஏற்படுகின்றன.

இதனால் பொருளாதார ரீதியாக நட்டம் ஏற்படுகின்றது.

இவ்வாறான நிலைமைகளை கருத்தில் கொண்டு காவல்துறையின் நடத்தை காரணமாக இளைக்கப்படும் அநீதிகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு நட்டஈட்டை வழங்குவதற்கான புதிய நடைமுறையை பரிந்துரைக்கவுள்ளதாக காவல்துறை ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்..

No comments:

Post a Comment