Monday, October 01, 2012
இலங்கை::தமக்கு வாக்களித்த வறிய தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுமானால் திவிநெகும சட்டமூலத்துக்கு அவர்கள் ஆதரவளிக்கவேண்டுமென பொருளாதார அபிவிருத்தி
அமைச்சரும் ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான பஷில் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார்.
அனைத்துத்தரப்புக்களுடனும் கலந்துரையாடியதன் பின்னரே திவிநெகும சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. வறிய மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும் ௭ன்றும் அமைச்சர் குறிப்பிட்டார். திவிநெகும சட்டமூலம் தொடர்பாக தகவல்வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
திவிநெகும சட்டமூலத்திற்கு தற்போது மாகாண சபை அனுமதிகள் பெறப்பட்டுவருகின்றன. மேல் மாகாண சபை, வடமேல் மாகாண சபை மற்றும் ஊவா மாகாண சபை ஆகியவற்றில் இந்த சட்டமூலத்திற்கு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.இந்நிலையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் விசேட ஆ@ லாசகருமான பஷில் ராஜபக்ஷ இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
அனைத்து தரப்புகளுடனும் தீர்க்கமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் பின்னரே திவிநெகும சட்ட மூலம் கொண்டுவரப்பட்டது. வறிய மக்கள் தமது வாழ்வாதாரத்தை உயர்த்தி பொருளாதார ரீதியில் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கு இந்த திவிநெகும சட்டமூலம் உறுதுணையாக இருக்கும். குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமுர்த்தி வங்கித்துறையை சிறந்த முறையில் கட்டியெழுப்ப இது உதவும். வறிய மக்களின் பசியை தீர்த்து அவர்களை பொருளாதார ரீதியில் சிறந்த இடத்திற்கு கொண்டு செல்லும் நோக்கிலேயே இதனை செய்கின்றோம்.
தற்போது வடமாகாண மக்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்பட்டுவருகின்றது.அந்த வகையில் அப்பகுதிகளில் சமுர்த்தி வங்கித்துறையை கட்டியெழுப்பவும் அதன் மூலம் வறிய மக்கள் பயன்பெறவும்இது உதவும். தற்போது இந்த சட்டமூலத்திற்கு மாகாண சபைகளில் அங்கீகாரம் பெறப்பட்டுவருகிறது. இந்நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பானது புலம்பெயர் மக்களின் திட்டங்களுக்கு அமையவே செயற்படுகிறது ௭ன்பது ௭மக்கு தெரியும். இருப்பினும் தமக்கு வாக்களித்த வறிய தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டுமென தமிழ் தேசியக்கூட்டமைப்பு கருதுமானால் திவிநெகும சட்டமூலத்துக்கு அவர்கள் ஆதரவு அளிக்க வேண்டுமென கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுக்கிறேன். இந்த சட்டமூலத்தின் ஊடாக மாகாண சபைகளின் ௭ந்தவொரு அதிகாரமும் குறைக்கப்படமாட்டாது ௭ன்றார்.
No comments:
Post a Comment