Monday, October 29, 2012
சென்னை::சட்டசபை எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில், தேமுதிக கொறடா சந்திரகுமார் உள்பட 5 எம்எல்ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தரும்படி சபாநாயகர் தனபாலிடம் இன்று மனு கொடுத்தனர். இதுகுறித்து, சட்ட சபைக்கு வெளியே சந்திரகுமார் கூறியதாவது: தேமுதிக வெற்றி பெற்ற சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேச தேமுதிக தலைவரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த், சேந்தமங்கலம் எம்எல்ஏ சாந்தி, திருவெரும்பூர் செந்தில்குமார், செங்கல்பட்டு முருகேசன், மயிலாடுதுறை அருட்செல்வன் உள்ளிட்ட 5 எம்எல்ஏக்கள் முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு இன்று காலை சபாநாயகர் தனபாலிடம் கடிதம் கொடுத்துள்ளோம். இதில் அரசியல் எதுவும் அல்ல.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பிரச்னைகளை நிறைவேற்றுவது தொடர்பாகவே முதல்வரை சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளோம். இவ்வாறு சந்திரகுமார் கூறினார். பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு சந்திரகுமார் அளித்த பதில்: தேமுதிக எம்எல்ஏக்கள் 4 பேர், கட்சி அனுமதியின்றி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துள்ளனரே? அதுபற்றி எதுவும் பேச விரும்பவில்லை. அவர்கள் தாங்களே ராஜினாமா செய்வதாக கூறியுள்ளனர். அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்களா? இது முடிந்து போன விஷயம். அதுபற்றி பேச ஒன்றும் இல்லை. அவர்கள் கட்சியில் இருந்து வெளியே போவது குறித்து உங்கள் கருத்து என்ன? ஒரு வீட்டில் குடியிருக்கிறோம். அந்த வீட்டை காலி செய்து போகும் போது, வீட்டின் உரிமையாளருக்கு உரிய பொருட்களை அங்கேயே கொடுத்துவிட்டு செல்ல வேண்டும். அது என்ன என்பது சம்பந்தபட்டவர்களுக்கு தெரியும். இவ்வாறு சந்திரகுமார் பதில் அளித்தார்.

No comments:
Post a Comment