Friday, September 28, 2012
இலங்கை::வெளிநாடுகளில் குடிவரவு குடியகழ்வு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டுமென புதிய கடற்படையத் தளபதி ஜயனாத் கெகாலம்பகே தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்களது குடிவரவுச் சட்டங்களை கடுமையாக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு சட்டங்களை கடுiமாயக்குவதன் மூலம் சடட்விரோத குடியே;றங்களை தடுத்து நிறுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் பொருளாதார ரீதியான நன்மைகளை கருத்திற் கொண்டே ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். புகலிடம் கோருவதற்கு எதுவித அரசியல் காரணங்களும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில தரப்பினர் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் புகலிடக் கோரிக்கையாளர்களை ஆபத்தான பயணங்களில் ஈடுபடுத்துவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து நிறுத்த முழு அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர் பயணங்கள் மட்டுமன்றி போதைப் பொருள் கடத்தல், ஆயுத கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment