Friday, September 28, 2012

இந்திய இலங்கை உறவுக்கு வலு - ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது!

Friday, September 28, 2012
சென்னை::ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் இந்திய விஜயம், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சுமூக உறவுக்கு உயிர் வழங்கி இருப்பதாக த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு, இந்தியா ஆதரவாக வாக்களித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த நிலையில் ஜனாதிபதி அண்மையில் சான்சியில் நிர்மானிக்கப்படும் பௌத்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துக் கொள்ள இந்தியா வந்திருந்தார்.

இதன் போது இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவினை மீண்டும் வலுப்படுத்துவதாக அமைந்திருப்பதாக ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment