Friday, September 28, 2012

2013ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் - கெஹெலிய ரம்புக்வெல்ல!

Friday, September 28, 2012
இலங்கை::2013ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் கூறினார்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மொத்த செலவினம் 2520 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 1280 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தத் தொகையில் 20 பில்லியன் ரூபா வெளிநாட்டு கையிருப்பும் அடங்கியுள்ளது.

2013ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 7% பொருளாதார வளர்ச்சி வேகம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் பணவீக்கத்தை 7% ஆக பேணுவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment