Friday, September 28, 2012
சென்னை::இலங்கை மற்றும் இந்திய பெண்களை தொழில்வாய்புக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய புலனாய்வுத் தரப்பினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து இவ்வாறான பெண்கள் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு பலவந்தமாக இந்த தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட சில பெண்கள் இந்திய புலனாய்வுத் தரப்பில் முறையிட்டுள்ள போதும், பலர் முறைபாடுகளை தெரிவிக்க முன்வர தயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
No comments:
Post a Comment