Friday, September 28, 2012

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ள முடியும் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Friday, September 28, 2012
இலங்கை::ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கூட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கதவுகள் திறந்தே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதே தமது பிரதான இலக்கு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை அபிவிருத்தி செய்வதிலேயே தாம் கவனம் செலுத்தி வருவதாகவும், எவரையும் அரசியல் ரீதியாக பழிவாங்கும் எண்ணம் கிடையாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில எவர் வேண்டுமானாலும் இணைந்து கொள்ள முடியும் என்ற கொள்கையில் மாற்றம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு சிங்களவர்கள் மட்டும் வாக்களிக்கவில்லை எனவும் தமிழர்களும் முஸ்லிம்களும் வாக்களித்துள்ளதாகவும் அவா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment