Friday, September 28, 2012
மதுரை::"ஹெராயின்' போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட, இலங்கை நபருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.
மதுரை தமிழ்நாடு ஓட்டலில், 2003 ஜன.,ல், 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, 7.4 கிலோ எடையுள்ள, "ஹெராயின்' பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், சர்வதேச போதைக் கடத்தலில் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த முகமது பஸ்ரீன் என்பவரிடம் வாங்கியதாக, தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், அதே ஆண்டு, ஏப்ரலில், சென்னையில் முகமது பஸ்ரீனை, போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு, மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று, முகமது பஸ்ரீனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து, நீதிபதி பொன்பிரகாஷ் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment