Friday, September 28, 2012

இலங்கை தூதரகம் முற்றுகை விவகாரம்: விடுதலை சிறுத்தையினர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

Friday, September 28, 2012
சென்னை::இலங்கை,தூதரகத்தை முற்றுகையிட்ட விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 2 பேரின் முன்ஜாமீன் மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இலங்கை அதிபர் ராஜபக்ஷே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு கடந்த 21ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது சிலர் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் இளம்சேகுவாராவை கைது செய்தனர். மேலும் சிலர் மீது சிறுகாயம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த வேளச்சேரியை சேர்ந்த வெங்கடேசன் (எ) வன்னிலவன் (36), அசோக்நகரை சேர்ந்த தமிழ் முகிலன் (எ) தர்மசிவம் (40) ஆகியோர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு முதன்மை செஷன்ஸ் நீதிபதி கலையரசன் முன்பு விசாரணை க்கு வந்தது. அப்போது, அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் ஆஜராகி, முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து மனுதாரர்களின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment