Friday, September 28, 2012

மெனிக்பார்ம் தொடர்பில் ஐ.நா!

Friday, September 28, 2012
இலங்கை::மெனிக்பார்ம் முகாம் இந்த வாரத்துடன் மூடப்படுகின்றமை, உள்நாட்டுடில் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமைவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.

அதன் இணையத்தளத்தில் இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த அவலத்தை இறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை கருதப்படும் என்று, அகதிகள் உயர்ஸ்தானிகரகத்தின் இலங்கைக்கான பிரதிநிதி மைகேல் ஸ்வாக் தெரிவித்துள்ளார்.

மெனிக்பார்ம் முகாம் கடந்த 2009ம் ஆண்டு திறக்கப்பட்டது.

2 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்கள் இதில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த முகாமில் இன்னும் 346 பேர் மாத்திரமே எஞ்சி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment