Thursday, August 23, 2012
இலங்கை::பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ,நேற்று (ஆகஸ்ட் 22) சேர் ஜோன் கொதளாவல பாதுகாப்புப் பலகலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த ‘வருடாந்தக் கருத்தரங்கு 2012’ இன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இரண்டு நாட்களைக் கொண்ட இக் கருத்தரங்கானது 'நல்லிணக்க மற்றும் நிலையான அபிவிருத்தி மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல்'எனும் தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக் கருத்தரங்கில் பிரபலங்கள், அறிஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.இதன் அமர்வுகள் பாதுகாப்பு, மருத்துவம், சட்டம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப அறிவியல், நிர்வாகம், சமூக அறிவியல் மற்றும் மனிதநேயம் மற்றும் கல்வி அகிய கருப்பொருள்களின் கீழ் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில், பெரும் எண்ணிக்கையிலான புகழ்பெற்ற விருந்தினர்கள், பாதுகாப்பு பணியாளர்களின் பிரதானி, முப்படைத் தளபதிகள், மூத்த இராணுவ மற்றும் போலீஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள் உட்பட, பல்கலைக்கழக கல்வியாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் விருந்தினர்களும் கலந்துகொண்டனர்...
சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க மையத்தின் பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்பு செயலாளர்!
பண்டாரநாயக்க ஞாபகர்த்த மண்டபத்தில் ஆகஸ்ட் 21 அம் திகதி இடம் பெற்ற, சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க மையத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவின் பிரதம விருந்தினராக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ கலந்துகொண்டார். சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க மையமானது, பண்டாரநாயக்க தேசிய நினைவு அறக்கட்டளையின் கல்வி பிரிவாக இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வுக்கான பிரதம விருந்தினராக வருகைதந்த பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலாளரை, சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க மையத்தின் பாடத்திட்ட குழுவினர், பண்டாரநாயக்க தேசிய நினைவு அறக்கட்டளையின் இயக்குனர் மற்றும் சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க மையத்தின் இயக்குனர் ஆகியோர் வரவேற்றனர்.
வெற்றிகரமாக தங்கள் டிப்ளோமாக்கள் மற்றும் உயர் டிப்ளோமாக்களை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களை பாதுகாப்புச் செயலாளர் வழங்கிவைத்ததுடன் அங்கு செயலாளர் சிறப்புரையும் நிகழ்த்தினார்.
சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க மையத்தில் டிப்ளோமோ மற்றும் உயர் டிப்ளோமா பெறுபவர்கள், அதன் உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் அதிகமான அதிதிகளும் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment