Thursday, August 23, 2012

ஆபாசப் படங்களை வெளியிடப்போவதாக யுவதியை அச்சுறுத்தி கப்பம் பெற்றவர்கள் கைது!

Thursday, August 23, 2012
இலங்கை::மாத்தறை, வெலிகம பகுதியில் யுவதியொருவரை அச்சுறுத்தி கப்பம பெற்ற இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் குறிதத் யுவதியின் ஆபாசப் படங்களை வெளியிடப்போவதாக அச்சுறுத்தி கப்பம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களான இளைஞர்கள் குறித்த யுவதியிடம் இரண்டு இலட்சம் ரூபா கப்பம் கோரியிருந்ததுடன், அதில் ஒரு இலட்சம் ரூபாவை நேற்று பெற்றுக்கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கப்பமாக பெற்றுக்கொண்ட பணத்துடன் சென்றுக்கொண்டிருந்த சந்தேகநபர்களை மாத்தறை பொலிஸ் பிரிவின் விசேட பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர். .

திருகோணமலை, கந்தளாய்ப் பகுதியில் வெளிநாட்டு ஆயுதங்களுடன் ஒருவர் கைது!


திருகோணமலை, கந்தளாய்ப் பகுதியில், வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்த கைக் குண்டு ஒன்றும் ரி 56 ரக தோட்டாக்கள் 26 மற்றும் துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தம்புல்லா நீதிமன்றத்திற்கு அண்மையிலுள்ள ஏரி ஒன்றின் அருகில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்புல்லா பொலிஸ் மற்றும் குற்ற புலனாய்வு பிரிவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment