Wednesday, August 29, 2012

பஸ்களில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் பிரசார சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை!

Wednesday, August 29, 2012
இலங்கை::பஸ்களில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் பிரசார சுவரொட்டிகளை அகற்றும் திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

பஸ்களில் சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் காட்சிப்படுத்தப்படுவதாக தமது திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பஸ் சங்கங்களால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பஸ்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment